இளவரசர் ஹரியின் இராணுவ
விடையத்தில் என்ன தான் நடக்கின்றது. கடந்த மே மாதம் 2007 ஆம்
ஆண்டு ஈராக் சென்று போர்களத்தில் பணிபுரியப்போவதாக ஆவலுடன்
காத்திருந்த இளவரசர் ஹரிக்கு கிடைத்ததெல்லாம் ஏமாற்றம் தான்
இராணுவத்தளபதிகள் முதலில் அனுமதி வழங்கியிருந்தாலும் உளவுத்துறை
அறிக்கையின் படி இளவரசர் ஈராக்கில் பணிபுரிவதென்பது அவருக்கு
மட்டுமல்ல அவருடன் கூட உள்ள படையினருக்கும் அச்சுறுத்தலாக
அமையும் என்ற காரணத்தால் அவரின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்
முடிந்தது. இதே போன்ற பிரச்சனைகள் எதுவுமே மறுபடி எழக்கூடாது
என்பதற்காகவே கடந்த டிசெம்பர் மாதம் ஹரி அப்கானிஸ்தான் சென்ற
செய்தியினை அதிகாரிகள் திட்டமிட்டு
இருட்டடிப்புச்செய்திருந்தார்கள் துர் அதிஸ்டவசமாக இந்தச்செய்தி
வெளியாகிவிட்டதால் இளம் இளவரசரின் இராணுவப்பணி அத்தோடு
முடியப்போகின்றது. இது தொடர்பாக இளவரசர் வெளியிட்ட செய்தியில்
முன்னரங்க நிலைகளில் விமானக்கட்டுப்பாட்டாளராக பணிபுரியும் அவர்
சாதாரன படையாளியைப்போல வாழ்வது மிகவும் சந்தோசமாக
இருப்பதாகவும் தனது பாதுகாப்புக்கு எப்போதும் அச்சுறுத்தல்
ஏற்படலாம் என்பதை தான் அறிந்தே இருப்பதாகவும் இந்த
அச்சுறுத்தல்கள் எவையும் அரச உறுப்பினர்களிற்கு சாதாரனமானவையே
என்றும் குறிப்பிட்டிருந்தார்.
.>>
<<
.:
சங்கடமாகும் பிரகடனம் !:.
இரண்டு
மில்லியன் மக்களைக்கொண்ட கொசோவோ கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம்
திகதி சுய சுதந்திரப்பிரகடனத்தை அறிவித்துள்ளது உத்தியோக
பூர்வமாக சேர்பிய நாட்டில் இருந்து பிரிந்து கொசோவோ என்ற ஒரு
தனிநாடாக தங்களை அறிவித்துக்கொண்டனர். இந்த அறிவிப்பிற்கு
உடனடியாகவே சேர்பியா கண்டனம் செலுத்தி கொசோவோவின் இந்த
பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்திருந்தது அதே
போலவே ரஸ்யாவும் சேர்பியாவின் ஒத்துழைப்பின்றி நடைபெற்ற இந்த
சுதந்திரப்பிரகடனம் சட்ட பூர்வமற்றது என்று அறிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, யோர்மனி,
பிரான்ஸ் போன்ற நாடுகள் கொசோவோவின் சுதந்திரப்பிரகடனத்தை
ஏற்றுக்கொண்டு கொசோவோவிடனான தொடர்பினை மேற்கொள்ள முன்வந்த
போதும் ஐரோப்யி யுனியனில் உள்ள சைப்பிறஸ், ஹிரீஸ், றோமானிய
மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் கொசோவோவை
அங்கிகரிக்கவில்லைக்காரணம் இந்த அங்கீகரிப்பானது தமது
நாடுகளிற்குள் இருக்கும் கிளர்ச்சிக்குழுக்களை ஊக்குவிப்பதாக
அமையும் என்ற அச்சம் என்று தெரிவிக்கப்படுகிறது.
.>><<
...::::
சமுதாயக்கண்ணோட்டம் ! ::::....
அன்னையை மதிப்பதற்கு ஒரு தினம் கொண்ட மனித நேயத்தை மதிக்கவே வேண்டும், கொண்டாடும் மைந்தர்களை மதிக்கிறேன் நான். என் மனைவிக்கும் எனது தாய்க்கும் நிறைய வித்தியாசங்களை நான் காண்கிறேன். இன்றைய நவீன யுகத்தில் தாய்மை கூட நவீனத்துவம் அடைந்து வருகின்றது. பத்து மாதம் சுமந்தெடுத்து தன் உதிரத்தை பாலாக்கி வளர்ந்த பின்னும் என்ன பிள்ளையாகவே எண்ணிக்கொண்டிருக்கின்ற என் தாயையும். பெத்தெடுத்த சில நாட்களிலேயே குழந்தைகள் பராமரிக்கும் இடங்களில் காலையில் அனுப்பிவிட்டு இரவு வந்து பிள்ளையை எடுக்கும் இன்றைய நவீனத்துவத்தாய்மைக்கும் இடையே சற்றேனும் வித்தியாசம் இல்லையா? அதற்காக நான் பெண்களை சாடுகின்றேன் என்று சண்டைக்கு வந்துவிடாதீர்கள். எனது பார்வையில் என் தாயரார் சொல்வார் நான் இரண்டரை வயது வரை தாய்ப்பால் குடித்தேன் என்பார்கள் ஆனால் இன்று எத்தனை தாய்மார் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள்? ஒரு குழந்தைக்கும் தாய்க்குமான உறவானது இப்போதெல்லாம் அந்த பத்துமாத கற்ப காலம் வரை மட்டுமா? குடும்பப்பொருளாதார நிலைமை ஒருவகையில் தாய்க்கும் சேய்க்கும் இடையில் உறவாடலின் நேரத்தினைக்குறைக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்.
>> <<
...::::
மருத்துவம்:
முருங்கை
::::....
நம்மில் பலருக்கும் முருங்கை பற்றி தெரியும்
என்று நினைக்கறேன். முருங்கையின் பயன்கள் இலைமுதல் காய் வரை
மனிதனுக்கு மருத்துவக்குணங்களை அள்ளித்தருவதாய் இருக்கின்றது.
அதனால்த்தானோ என்னவோ தாயகத்தில் கூடுதலாக ஒவ்வொரு வீட்டிலும்
முருங்கை மரம் இருக்கும். முருங்கை இலையில் வறுவல் செய்வார்கள் ஆகா
தேங்காய்ப்பூவும் முருங்கையிலையும் வெங்காயத்தோடு சேந்து முறுக
வறுவட்டால் அதன் சுவையே தனிதான். சரக்கரைத்து வைத்த முருங்கைக்காய்
கறியின் சுவைக்குக்கிட்ட எதுவுமே வராது என்பது எனது கருத்து. சரி
சமையலைவிடுங்கள் முருங்கை இலையில் இரும்புச்சத்து அதிகமாக
இருக்கிறது. இரும்புச்சத்துக்குறையினால் ஏற்படுகின்ற இரத்தச்சோகை,
அனிமீயா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கும் அதற்குரிய
மருத்துவப்பொருளாகவும் முருங்கையிலையினைப் பயன்படுத்தலாம்.
எப்போதும் மாத்திரைகளில் மூலம் பெறப்படுகின்ற விட்டமின்கள் மற்றும்
கனியுப்புகளுக்கும் இயற்கையிலான காய்கறி இலைவகை பழங்கள்
போன்றவற்றால் கிடைக்கின்ற ஊட்டங்கள் எப்போதுமே சிறந்தது தான். >> <<